அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சி பள்ளி ஒன்றில், பயிற்றுவிக்கப்பட்டு வந்த இஸ்லாம் பாடத்திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி கடுமையாக கண்டித்துள்ளார்இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், மாணவர் விரும்பினால் தானாகத் தெரிவு செய்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும்
ஆட்சேபத்திற்குரியது என்றார்.மேலும் மத சுதந்திரம், கலாச்சார ரீதியான விழிப்புணர்வு போன்ற
அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதாக இந்த பாடத் திட்டம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆட்சேபத்திற்குரியது என்றார்.மேலும் மத சுதந்திரம், கலாச்சார ரீதியான விழிப்புணர்வு போன்ற
அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானதாக இந்த பாடத் திட்டம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா இஸ்லாத்துடன் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், மெக்கா உள்ளிட்ட இஸ்லாமியப் புனித நகரங்கள் மீது அணு குண்டுத் தாக்குதல் நடத்துவது பற்றியும் அமெரிக்கா பரிசீலிக்க வேண்டி வரலாம் என்பது போலவும் இந்த பாடத்திட்டம் அமைந்திருந்தது.
மேலும் இந்தப் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுவது சென்ற மாதம் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக