தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.5.12

ஓமனுக்கு அருகே எண்ணெய்க் கப்பல் கடத்தல் - 11 இந்தியர்கள் சிறைப் பிடிப்பு


சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப் பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டி ருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகேவைத்து சோமாலிய க் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் ப ட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளி நாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.இக்கப் பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால்
கைப்பற்றப் பட்டுள்ளது. செங்கடல் வழியாகவும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியி
னூடாகவும் பயணம் செய்யு ம் பல சரக்குக் கப்பல்களை சோமாலியக் கடற் கொள்ளையர்கள் இதற்கு முன்னர் கடத்தியிருந்ததுடன் அவற்றை விடுவிப்பதற்கு பல மில்லியன் டாலர்களைப் பேரம் பேசுவது வழக்கம்.

இன்று கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலான ஸ்மிர்னியை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஐரோப்பிய யூனியனால் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
இதுவரை சோமாலியக் கடற் கொள்ளையர்களால் 17 பெரிய கப்பல்களும் 300 இற்கும் அதிகமான ஊழியர்களும் கடத்தப்பட்டு பேரம் பேசிய பின் விடுவிக்கப் பட்டிருந்தனர்.

இக்கடற் கொள்ளையர்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு இந்தியா,பிரிட்டன்,அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டாக இணைந்து அரேபியத் தீபகற்ப பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்: