‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அணுகுண்டை விட ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது. இதை தடை செய்யலாமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதுடன், விளக்கம் கேட்டு அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்கள்
சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கும், பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை விட ஆபத்தானது என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பிளாஸ்டிக் பைகள், இன்றைக்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒன்றிவிட்டது. துணி கடைகள் தொடங்கி, பெட்டிக்கடைகள் வரை எந்த பொருளை வாங்கினாலும் பிளாஸ்டிக் பைகளில்தான் போட்டு தருகிறார்கள். இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டபிறகு அப்படியே குப்பையில் போடப்படுகின்றன.
மண்ணில் புதைக்கப்பட்டாலும் பிளாஸ்டிக் பைகள் மக்கிப்போகாது. இதனால், பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிடுகிறது. இந்த பைகளை கால்நடைகள் விழுங்கிவிடுகின்றன. இதுவே கால்நடைகளுக்கு எமனாகிவிடுகிறது. இதனால், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிராணி நலனுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது எப்படி என்பது பற்றி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகளை மாநிலங்கள் நடைமுறைப்படுத்துவது இல்லை. இதனால், நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள் குவியல்குவியலாக கிடக்கின்றன. கடற்கரை, நதிக்கரை, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், குப்பை மேடுகளில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கிடக்கின்றன.
மீதமான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து குப்பை தொட்டியில் போட்டுவிடுகின்றனர். உணவுக்கு ஆசைப்பட்டு, இந்த பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் குறிப்பாக பசு மாடுகள் முழுங்கிவிடுகின்றன. ஒருகட்டத்தில், கால்நடையின் வயிற்றின் பெரும்பகுதியை பிளாஸ்டிக் பைகள் அடைத்துக்கொள்கிறது. இது அவற்றின் உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது. பசுக்களின் வயிற்றில் 30 கிலோ முதல் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது என்பதை கால்நடை மருத்துவமனை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நாடுமுழுவதும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, முகோபாத்யா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஷியாம் திவான் வாதாடுகையில்,”பிளாஸ்டிக் பைகளை விழுங்குவதால் ஏராளமான கால்நடைகள் பலியாகின்றன. பிரேத பரிசோதனையில் அந்த கால்நடைகளின் வயிற்றில் 50 கிலோ வரை பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை தடை செய்யாவிட்டால் நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும்” என்றார்.
இதை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூறியதாவது:
இதை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூறியதாவது:
பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளின் உயிரை குடிக்கின்றன. அதோடு, ஏரி, குளங்கள், பாதாள சாக்கடைகளில் கூட பிளாஸ்டிக் பைகள் குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது அணுகுண்டை விட ஆபத்தானது. தொடர்ந்து அதை பயன்படுத்துவது அடுத்த தலைமுறையினருக்கு ஆபத்தாகிவிடும். நிலைமை மோசமாவதை தவிர்க்க பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது அதை தயாரிப்பவர்களே பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய வேண்டும். இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
* உலகம் முழுவதும் ஓராண்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு எவ்வளவு தெரியுமா? தலைப்பில் நீங்கள் படித்த எண்ணிக்கை தான். அதாவது, 50 ஆயிரம் கோடி.50,000,00,00,000
* ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* இந்தியாவில் தான் , மற்ற நாடுகளை விட, மிக அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் பைகள் பல வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
*பிளாஸ்டிக் பைகளை அழிப்பது கடினம். பிளாஸ்டிக் முழுமையாக அழிய 300 ஆண்டுகள் ஆகும் என்பது விஞ்ஞானிகள் தகவல்.
* காய்கறி முதல் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் பைகள் ஊடுருவி விட்டன.
* பிளாஸ்டிக் பைகளை தவறுதலாக விழுங்கி, பசுக்கள், கடல் விலங்கினங்கள் மடிவது கணக்கிலடங்காது.
* பிளாஸ்டிக் பைகள் குவிவதால் ஆறு, குளங்களும் விஷத்தன்மை ஆகின்றன.
* 20 மைக்ரான் தடிமன், 8க்கு 12 அங்குலம் கீழ் அளவுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது. ஆனால் அமலாக்கம் இல்லாததால், சட்டவிரோதமாக பைகள் ஊடுருவி வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக