முன்னாள் இராணுவத் தளபதி நேற்று வெலிக்கடை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் .வெளியில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள், ஆதர வாளர்கள் மத்தியில் உரையாற்றினார். “நான் தற் போது சுதந்திர மானவன். எனக்காக முன்வந்த அ னைவருக்கும் நன்றி. உங்களுக்காக நான் எப்போது ம் முன்னிற்பேன். நான் உங்களை விரைவில் நெரு ங்குவேன். உங்களுக்காக எமது வாழ்க்கையை அர்ப் பணிப்பேன்.”என பொன்சேகா உணர்வு பொங்க தெரி வித்துள்ளார்.பொன்சேகா, இராணுவத்
தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கி யிருந்தது. அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கும் உத்தரப்பத்திரத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.இந் நிலையில் சரத் பொன்சேக்கா சற்று முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
இன்று காலை கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சரத்பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இவர் விடுதலை செய்யப்படுவார் என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தனியார் வைத்தியசாலையில் இருந்த இவர் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இவருக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் நவலோக வைத்தியசாலையின் முன் அவரின் ஆதரவாளர்கள் பலரும் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக