தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.5.12

அமெரிக்க ஜம்போ விமானத்தை வீழ்த்திய லிபிய குற்றவாளி புற்று நோயால் மரணம்.


லொக்கர்பியில் 1988 இல் குண்டுதாக்குதலை நடத்தியதற்காக குற்றவாளியாகக் காணப்பட்ட லிபிய நபர் மரணமானார்.270 பேர் பலியான அந்தத் தாக்குதல் குறித்து குற்றங்காணப்பட்ட ஒரே நபர் அப்தல் பசட் அல் மெக்ராஹி ஆவார். 2001 இல் இவருக்கு ஆயுட் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னதாக மன்னிப்பு அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.



அவர் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் அவதியுற்றார்.
ஆனால், அவரது விடுதலை குறித்து எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. குறிப்பாக அமெரிக்காவில், இவரது விடுதலையை அதிபர் ஒபாமா ''ஒரு தவறு'' என்று கூறியிருந்தார்.
ஸ்கொட்டிஷ் நகரான லொக்கர்பியில் இவர் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒரு அமெரிக்க ஜம்போ விமானம் வீழ்த்தப்பட்டது.

0 கருத்துகள்: