பிணையில்விடுவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிஷ்டியை அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சிறப்பு விமானத்தை டில்லிக்கு அனுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த மருத்துவர் கலீல் சிஸ்டி, 82. இவர், 1991ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்த தன் தாயைப் பார்க்க வந்தார். அப்போது, அவரது உறவினருடன் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்தது.இந்த வழக்கில், சிஸ்டிக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. இதை அடுத்து, அவர்
அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 20ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிஸ்டியின் வயதைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு பிணை அளித்தது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில், பாகிஸ்தான் செல்ல, உச்ச நீதிமன்றம் கலீஸ் சிஷ்டிக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்று, சிஸ்டி பாகிஸ்தான் புறப்பட்டார். இவரை அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சிறப்பு விமானத்தை டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விமானத்தில் இஸ்லாமாபாத் வந்த சிஸ்டியை, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வரவேற்றார்.சரப்ஜித்தை விடுவிக்க கடிதம்பாகிஸ்தான் சிறையில் வாடும் சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்தாரிக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சர்தாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கொலை வழக்கில் கைதாகி, இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 82 வயதான பாக்., விஞ்ஞானி கலீல் சிஷ்டிக்கு, சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதோடு, அவர் பாகிஸ்தான் செல்லவும் அனுமதித்தது.
அதே மனிதாபிமான அடிப்படையில், பாகிஸ்தான் சிறையில் வாடும், இந்திய சரப்ஜித் சிங்கையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த கடிதத்தை சிஷ்டியின் மகள் அம்னாவிடம், கட்ஜு ஒப்படைத்தார். அவர், கடிதத்தை கராச்சியில் பாகிஸ்தான் நிர்வாகத்தினரிடம் வழங்குவார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக