இஸ்ரேல் நாட்டின் மொசாத் உளவுப் பிரிவைச் சேர்ந்த மஜீத் அலி ஃபாஷி எனும் நபருக்கு நேற்று ஈரானில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரானில் செயற்பட்டு வரும் IRIB TV எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.கடந்த 2010 ஜனவரி மாதம், மசௌத் அலி மொகமது எனும் டெஹ்ரான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானியை
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வெடி குண்டு ஒன்று ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு, விஞ்ஞானியின் வீட்டுக்கு முன்னே வெடிக்கச் செய்யப்பட்டதன் மூலமே அணு விஞ்ஞானி கொலை செய்யப் பட்டிருந்தார்.
இதேவேளை, ஈரான் அரசாங்கம் தனது அணு விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும், இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிட்டுத் தாக்கி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் அரசு தற்போது அதிகரித்திருக்கும் யுரேனியம் செறிவூட்டல் செயற்பாட்டின் மூலம் சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அதிகளவான அணுவாயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என மேலைத்தேய நாடுகள் அச்சமுற்றுள்ளன.
ஆனால் இக் கூற்றை முற்றிலும் மறுத்துள்ள ஈரான், தனது அணுத் திட்டம் சமாதான நோக்கத்திற்கு மட்டுமேயானது என வாதிட்டு வருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக