விரைவில் நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அண்மையில் உபி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், மே.வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் கட்சியும் எடுக்கின்ற ஒருமித்த முடிவு குடியரசுத் தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திவிட
முடியும் என்ற கருதுகோள்நிலவுகிறது. அவ்வாறிருக்க, முலாயம் சிங் கட்சி ஒரு முஸ்லிமையே அடுத்த குடியரசுத் தலைவராக ஆக்க ஆதரவு என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது
செய்தியாளர்களிடம் இன்று சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கமல் ஃபரூக்கி கூறும்போது, ஒரு முஸ்லிம் அடுத்த குடியரசுத் தலைவராக வரவே சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது என்றார். மேலும், முஸ்லிம் வேட்பாளரை பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
இப்படி அறிவிப்பது காங்கிரஸ் கூட்டணியை தனிமைப்படுத்துவதாக ஆகாது என மேலும் அவர் தெரிவித்தார். கடந்த 2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை ஆதரித்ததாகவும், ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி அவரை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் ஹன்சாரி, முன்னாள் ராஜ்ய சபா துணை தலைவர் கே.ரகுமான் கான், தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஓய். குரேஷி ஆகியோர்களின் பெயர்கள் ஊடகங்ளிலும் மக்களிடமும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார் ஃபரூக்கி "இவர்கள் அனைவரும் தத்தம் துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
மேலும், தேசிய முற்போக்கு கூட்டணி அல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும், நிறைய தகுதி வாய்ந்த தலைவர்கள் இருப்பதாகவும் கூறினார் ஃபரூக்கி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக