மலேசியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவியை, பள்ளியில் சேர்க்காததை கண்டித்து பிரதமர் அலுவலகம் முன்பாக இருகட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.மலேசியாவில் ஆளும் கூட்டணியில், மலேசிய இந்திய காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.பிரதமர் நஜீப் ரசாக்குக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில், பிரதமர் அலுவலகத்தில் மலேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று கூடியிருந்தனர்.இதற்கிடையே ரெஷினா, 17, என்ற மாணவிக்கு உரிய அடையாள அட்டை
இல்லாததால் அந்த பெண்ணை பள்ளியில் இருந்து நிறுத்தியுள்ளனர். இதை கண்டித்து பி.கே.ஆர்., கட்சி பிரமுகர்கள், பிரதமர் அலுவலகம் முன்பு கூடி கோஷம் போட்டனர். இதனால், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கும், பி.கே.ஆர்., கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் எதிர்க்கட்சியான பி.கே.ஆர்.கட்சி பிரமுகர்கள் முரளி, குணசேகரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் மோகன் குறிப்பிடுகையில், "இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு உரிய அடையாள அட்டை கிடைக்காததற்கு அரசு காரணமல்ல.பெற்றோர் தான் காரணம்.
தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தை பிறந்ததும் அதை அவர்கள் பதிவு செய்வதில்லை. இதனால், தான் அவர்களுக்கு அடையாள அட்டை கிடைப்பதில்லை. நாங்கள் முயற்சி எடுத்து 9,529 பேருக்கு அடையாள அட்டை வாங்கி தந்துள்ளோம். ரெஷினாவுக்கும் அடையாள அட்டை வாங்கி தர முயற்சி எடுத்துள்ளோம்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக