பாபர் மசூதியை இடித்ததாக கரசேவகர்கள் மீதும், வெறியுணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. விரிவாக விசாரணை நடத்திய புலனாய்வுத்துறை 1993, ஒக்ரோபர் 5-ம் தேதி லக்னோ நீதிமன்றத்தில் இரண்டு வழக்கிலும் அத்வானி உட்பட 40 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதற்கிடையே பாபர் மசூதி வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு நீதிமன்றங்களை சந்தித்தது. அத்வானி மற்றும் 7 பேருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக (சதிவேலை/சதி ஆலோசனை) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் 2001-ல் லக்னோ நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அத்வானி உட்பட 21 பேரை விடுவித்தது. இதில் பால் தாக்கரே, கல்யாண்சிங் ஆகியோரும் அடங்குவர்.
இதை எதிர்த்து புலனாய்வுத்துறை அப்பீல் செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தாபரேலி சிறப்பு நீதிபதி, அத்வானியை தவிர மற்ற 7 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
ஆனால் புலனாய்வுத்துறை இதை ஏற்றுக்கொள்ளாமல், லக்னோ உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கு அத்வானி உட்பட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி ரேபரலி நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு இந்த வழக்கு பல்வேறு கட்டங்களையும், முறையீடுகளையும், உத்தரவுகளையும் சந்தித்து, 19 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் புலனாய்வை மேற்கொண்டு வரும் புலனாய்வுத்துறை சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முதல் தகவல் அறிக்கையில் (197/92) குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களில் சிலரை தனியாக பிரித்து வேறொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது சாத்தியப்படாதது.
பிரச்சினைக்குரிய கட்டிடத்தை இடித்ததில் தனியொருவர் எவரையும் குற்றத்தில் உட்படுத்த முடியாது. இதில் ஈடுபட்டதால் சிலரை பிரிப்பது சாத்தியமில்லை.
எனவே இந்த பிரிவில் (197/92) உள்ளவர்கள் எவரையும் 198/92 பிரிவில் சேர்க்க இயலாது. எனவே, இரண்டு வழக்குகளையும் தனித்தனியேதான் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்டவர்கள், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதுடன், கோஷங்களையும் எழுப்பினர். அவர்களின் பேச்சும், கோஷங்களும்தான் கரசேவகர்களிடம் வெறியை தூண்டி, சர்ச்சைக்குரிய கட்டிடத்தை (பாபர் மசூதி) இடிக்க காரணமாக அமைந்தது.
எனவே அத்வானி உள்ளிட்ட 8 பேர் மீதும் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இருந்து ஒருவரும் விடுவிக்கப்பட முடியாது.
அத்வானி உள்ளிட்ட அனைவரும் கட்டிடம் இடித்த சதித்திட்ட குற்றச்சாட்டை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக