தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.4.12

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் முஸ்லீம் காங்கிரஸ் உறுதி : ரவூப் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்பட கூடாது என்பதில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெளிவாகவும், உறு தியாகவும் இருப்பதாகவும், இவ்விடயத்தில்அனைத் து முஸ்லீம் தரப்பினரும் ஒன்றாக இணைந்து போரா ட வேண்டியது அவசியம் எனவும் சிறிலங்கா முஸ்லீ ம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மீண்டும் தெரிவி த்துள்ளார்அண்மையில் தம்புள்ள்வில உள்ளபள்ளி வாசல் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது டன், அது பௌத்தர்களின் புனிதப்பிரதேச
த்திற்குள் அமைந்திருப்பதால் உடன டியாக அதை அங்கிருந்து அகற்றவேண்டுமென பௌத்த மத தலைவர்கள் த லைமையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டிருந்தது. இனவாதத் தை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரையில் உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை எனவும் மாறாக இவற்றை  ஆளும் தரப்பு சில முக்கியஸ்தர்கள் சிலரே தூண்டிவிட்டுள்ளார்கள் எனவும் முஸ்லீம் சமூகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இவ்வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தம்புள்ளவில் இவர்கள் கூறும் இடம் புனித பிரதேசமே அல்ல, எந்த புத்தகத்திலும் இந்த பிரதேசம் புனித பிரதேசம் என கூறப்படவில்லை. தம்புள்ளையில் உள்ள சிங்கள மக்கள், மதகுருமார்கள் பலர் இந்த பள்ளிவாசல் அங்கு இருப்பதை ஆட்சேபிக்கவில்லை. ஒரு சில பிக்குமார் வெளியிலிருந்து ஆட்களை கொண்டுவந்து இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சில துவேஷம் மிக்க சிங்கள வானொலிகளும் துணைபோகின்றன.

அமைச்சரவையில் நான் இதனை கடுமையாக ஆட்சேபிப்பேன். என்ன நினைத்துக் கொண்டு இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த அரசுக்காக ஜெனிவாவில் போய் வக்காளத்து வாங்கினீர்களே? அதற்கு ஆட்சியாளர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

நாங்கள் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அதையும் மீறி அரசு செயற்படுமானால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் சொல்லிவைக்க விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தரவு : GTN

0 கருத்துகள்: