மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஸ்வீன் மிச்செல்சன் தெரிவித்தார்.
மேலும் 1989ம் ஆண்டிற்கு பிறகு மியான்மரில் இருந்து நோர்வே வரும் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இவருக்கு நோபல் பரிசு 1991ஆம் ஆண்டு வழங்கிய போது அதை பெறுவதற்கு கூட இராணுவ அரசால் அனுமதிக்கப்படவில்லை என்பதும், ஆனால் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு குரலால் கடந்த ஆண்டு தான் அவர் வீட்டு காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக