கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் டிபாசிட் செய்துள்ளவர்க ளில் இந்தியர்களே அதிகம். இந்தியர்களின் பணம் 24.5 லட் சம்கோடிரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்ய ப்பட்டுள்ளது’ என, சி.பி.ஐ., இயக்குனர் தெரிவித்துள்ளார்.டி ல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி .சிங் கூறியதாவது:இந்தியா உட்பட பல நாட்டைச் சேர்ந்த வர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த பணத்தை, மொ ரீஷியஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டிஷ் வெர்ஜின் போன்ற வ ரிச் சலுகை தரும் நாடுகளில் டிபாசிட் செய்துள்ளனர். அதி லும், குறிப்பாக
இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான், இந்த நாடுகளில் அதிக அள வில் டிபாசிட் செய்துள்ளனர். இந்தியர்களின் பணம் 24.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லா ந்து நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளவர்களில், இந்தியர்களே அதிகம்.ஊழல் குறைவான நாடுகள்:இப்படி சட்ட விரோதமாகப் பணத்தை டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை, சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து பெறுவது சாதாரண விஷயம் அல்ல. வரிச் சலுகை அளிக்கும் நாடுகளில், 53 சதவீத நாடுகளில், ஊழல் குறைவான அளவில் நடப்பதாக, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிச்சலுகை அளிக்கும் நாடுகளில், நியூசிலாந்து நாட்டில், மிக, மிக குறைவான அளவில் ஊழல் நடப்பதாகவும், இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 5வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7வது இடத்தில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பணம் செல்வது எப்படி? “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கு, மதுகோடா வழக்கு போன்றவற்றை, சமீபத்தில் சி.பி.ஐ., விசாரித்தபோது, “இந்தியாவில் சட்ட விரோதமாகச் சேர்க்கப்படும் பணம், இங்கிருந்து துபாய், சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிட்சர்லாந்து மற்றும் பல வரிச் சலுகை அளிக்கும் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.நம்நாட்டிலிருந்து திருடிச் செல்லப்பட்ட சொத்துக்களை கண்டு பிடிப்பது, அதை முடக்கிவைப்பது, பறிமுதல் செய்வது மற்றும் மீட்டுக் கொண்டு வருவது போன்றவை சட்டரீதியான சவாலான விஷயங்கள். இதற்கு மிகுந்த நிபுணத்துவமும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவசியம். சொத்து மீட்பு விசாரணையை, மேலாண்மை செய்வதும் சிக்கலானது, கால அவகாசமாகக் கூடியது, செலவு நிறைந்தது.இவ்வாறு சி.பி.ஐ., இயக்குனர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக