தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.11

சவூதியில் சூனியக்காரிக்கு மரண தண்டனை

சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு  அந்நாட்டுச்  ச ட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபி யாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்ட னை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப்  நகரில் நிறை வேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய

சித்து வேலைகளை நடைமுறைப்படுத்தியமைக்காக ஆமினா த/பெ அப்துல்ஹலீம் நாசர் என்ற சவூதி பெண்மணியே இவ்வாறு மரண தண்டனை பெற்றவர் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.


சவூதியில் இவ்வாண்டு இதுவரை 73 பேர் மரண  தண்டனை பெற்றுள்ளார்கள். அவர்களில் பெண்கள் எத்தனை என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆயினும் கடந்த அக்டோபர் மாதம் தன் கணவனை உயிரோடு வீட்டில் கொளுத்திய பெண்ணொருவரும் மரணத்  தண்டனைப் பெற்றிருந்தார். அதன்பின்னர், அடுத்து இந்தச் சூனிய மாது தண்டனை பெற்றுள்ளார். 

சவூதியைப் பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டில் 67 பெரும்   2010 ஆம் ஆண்டில் 27 பேரும் இப்பெரும் தண்டனைக்கு ஆளாகியிருந்தனர் என்று மனித உரிமைக் கழக அறிக்கை தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: