தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.12.11

பாகிஸ்தான் அதிபருக்கு மாரடைப்பு: பதவி விலகுவாரா?


வாஷிங்டன், 8 டிசம்பர்- பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடல்நலக்குறைவு காரணமாக அவர் பதவி விலகக்கூடும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் சர்தாரி தன் பிள்ளைகளைச் சந்திக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நேற்று மாலை பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு
விமானத்தில் சென்றார்.ஆனாலும், அவர்
வழக்கமான பரிசோதனைக்காகத்தான் துபாய் சென்றுள்ளதாக அவரது மருத்துவர் சல்மான் கூறினார். இருப்பினும் கடந்த 5-ஆம் தேதி இரவு சர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் பரிசோதனைக்காக துபாய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் அமெரிக்க அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முன்னால் அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

0 கருத்துகள்: