இதுவரை காலமும் கிழக்கு – மேற்கு என்று பிளவுபட்டுக்கிடந்த ஐரோப்பிய ஒன்றியம் இனி வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிளவுபடப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்புல நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்தது தெரிந்ததே. இந்தவகையில் கிரேக்கத்தைப் போல பாரிய பின்னடைவை
இத்தாலி சந்தித்துள்ளது. வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும் மிக மோசமான பின்னடைவு இத்தாலிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணயநிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் இத்தாலியின் உண்மையான பொருளாதார நகர்வை கண்காணிக்க வேண்டுமென நேற்று முன்தினம் அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு வடக்கு – தெற்கு நாடுகளின் நம்பிக்கையீனத்தின் பாரிய வெளிப்பாடே என்று டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழக பேராசிரியர் மர்லீனா வின்ட் இன்றைய காலைச் செய்திகளுக்கு தகவல் தந்துள்ளார். மேலும் கிரேக்கத்தின் பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பாப்பன்டுரு வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் மிகவும் வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியம் வடக்கு – தெற்காக பிளவுபடும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றவை ஏற்காதவை என்ற இருவேறு பிளவுகளில் சிக்குண்டுள்ளன. பிரான்சிய அதிபர் ஸார்கோஸி, ஜேர்மனிய சான்சிலர் எஞ்சலினா மேர்க்கல் இருவரும் திரை மறைவில் காய்களை நகர்த்துவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக