தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.9.11

உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை ‌திரு‌ம்ப பெறுவதாக போரா‌ட்ட‌க் குழு அ‌றி‌வி‌ப்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் குழுவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் ‌வாப‌ஸ் பெறப்படும் என்று போரா‌ட்ட‌க் குழு அறிவி‌த்து‌ள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை என்ற இடத்தில் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
போராட்டக் குழுவினரை அழைத்து இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தலைமையில் 22 பிரதிநிதிகள் இன்று முதலமைச்சரை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இ‌ந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழக முதமை‌ச்ச‌ர் ஜெயலலிதாவை போராட்டக்குழு நிர்வாகிகளும், சமூக தலைவர்களும், ஆயர்கள், பாதிரியார்களும் இன்று சந்தித்து பேசினோம். முதலம‌ை‌ச்ச‌ர் எங்கள் கோரிக்கைகளை முழுமையாக, பொறுமையாக கேட்டறிந்தார். நாளையே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இந்த அணுமின் திட்ட நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் பிரதமரை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு சந்திப்பதற்கு நேரம் கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.
நாங்கள் மேலும் ஒரு கோரிக்கையை முதலமை‌ச்ச‌ரிடம் தெரிவித்தோம். இந்தியாவில் எரிசக்தி கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அணுசக்திக்கு பதிலாக மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான கொள்கை மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அணுமின் நிலையங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என முதலமை‌ச்சரிடம் கேட்டுக்கொண்டோம். முதலமை‌ச்சர் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்தும் தமிழக அமைச்சரவை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.
அமைச்சரவை கூடி முடிவெடுக்க இருப்பதாக முதலமை‌ச்ச‌ர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறோம். உண்ணாவிரதம் இருக்கும் 127 பேருக்கும் மதிப்பளிக்கும் வகையில் நாளை அங்கு சென்று உண்ணாவிரதத்தை திரும்ப பெற இருக்கிறோம்.
எங்களை அழைத்துப் பேசி இந்த முடிவை எடுத்த முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பிரச்சனையில் தென்பகுதி அமைச்சர்களான செந்தூர் பாண்டியன், செல்லபாண்டியன், பச்சைமால் ஆகியோர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இனி எங்கள் போராட்டம் என்பது மத்திய அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்வீக அமைதி வழி போராட்டமாக இருக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இந்த அரசுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்போம்.
மத்திய அரசுக்கு எதிராக எங்கள் அடுத்த கட்ட போராட்டம் இருக்கும். இந்த போராட்டம் தொடர்பாக எங்களில் பலர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப பெற வேண்டும் என்று முதலமை‌ச்சரிடம் கேட்டுக்கொண்டோம். அதனையும் பரிசீலிப்பதாக முதலமை‌ச்சர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமியை பொறுத்தவரை எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. உண்ணாவிரத பந்தலுக்கு வந்து மக்களை சந்தித்து பேசினார் எ‌ன்று உதயகுமார் கூ‌றினா‌ர்.
———————
ரஷ்யாவின் உதவியோடு தமிழகத்தின் தென் கோடியில் கூடன்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மேற்கொண்டிருப்பவர்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமையன்று சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது மூன்று முக்கிய கோரிக்கைகளை மக்கள் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார். இந்த அணு மின் உலை காரணமாக மக்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் குறித்து மக்களிடன் முன்கூட்டியே கருத்து கேட்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அச்சம் எழுந்துள்ளமையால் இந்த உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
முன்னதாக தமிழகத்தின் தலைமைச் செயலரையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தப் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முதல் அறிக்கையில் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த அறிக்கையில் மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்குவது மத்திய அரசின் கடமை என்று கூறினார்.
இதையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திங்கள் கிழமை பேசினார். அமைச்சர் ஒருவரை அங்கு அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் உறுதி அளித்திருந்தார்.
அதே நேரம், மத்திய அமைச்சர் தங்களிடம் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்றும், போராட்டத்தை தொடர்வதாகவும் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: