தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.9.11

தீர்வுக்குள் போக வேண்டிய நெருக்கடிக்குள் இஸ்ரேல்


பாலஸ்தீன தனிநாட்டு கோரிக்கை ஐ.நாவின் பரிசீலனையில் இருக்கவே இஸ்ரேல் முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டது. இஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு தன்னுடைய மந்திரிசபையில் உள்ள எண்மரை அழைத்து இது குறித்த தமது அடுத்த கட்ட பணிகளை விலாவரியாக விளக்கினார். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களுடன் காலம் கடத்தாத பேச்சுக்களை நடாத்த நியூயோர்க் விரைந்துள்ளார். மேற்படி செய்தியை இஸ்ரேலிய
பத்திரிகையான காறாட்ஜ்ஜின் காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு வந்த பாலஸ்தீன தனிநாட்டுக் கோரிக்கை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இஸ்ரேலை அழைத்து இரகசிய பேச்சுக்களை நடாத்தி ஒரு முடிவை எட்டிய பின்னரே ஐ.நாவின் முடிவு வரும் என்ற நிலையே யதார்த்தமாக தெரிகிறது. எருசெலேம் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு பாலஸ்தீன தரப்பு கொடுக்கும் தளர்வான பதிலே பாதுகாப்பு சபையின் முடிவுக்கு வழிகாட்டும் என்று கருதப்படுகிறது.

0 கருத்துகள்: