தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.11

வா‌ச்சாத்தி பாலியற் பலாத்கார வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் : தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு

1992ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 54பேர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இறுதியாக, 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 ரேஞ்சர்கள் என 215 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வா‌ச்சாத்தி மலைக்கிராமப் பெ‌ண்க‌ளிடம் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் புரிந்த வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் கு‌ற்றவா‌ளிக‌ள் என த‌‌‌ர்மபு‌ரி மாவ‌ட்ட ‌
நீ‌திம‌ன்ற‌ம் ‌இன்று தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் தீர்ப்பு 19 வருடங்களின் பின் இன்று தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத் தீப்பில் சம்பந்தப்பட்ட 215 பேரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான த‌ண்டனை ‌விவர‌ம் ‌பி‌ன்ன‌ர் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌டு‌ம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறை‌யின‌‌ர் இணைந்த கூட்டுக்குழுவினர் சந்தன மரம் கடத்தல் புகார் தொடர்பாக சோதனை நடத்தச் சென்ற போது, அங்குள்ள மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 18 பெண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த குற்றசாட்டின் அப்படையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இன்று வழங்கப்பட்டுள்ள இத்தீர்பில் அனைவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பது, இந்திய வனத்துறை மற்றும் காவல்துறை என்பவற்றின் மீதான மற்றுமொரு களங்கம் என்பதுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகார வர்க்கம் நடத்திவரும் வன்முறைகளுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: