தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.11

பசுவை கொன்றால் 7 ஆண்டு சிறை: புது சட்டம் , மனிதனை கொன்றவன்களுக்கு ?

குஜராத், செப். 30-  பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் பசு வதை தடை சட்டத்தில் குஜராத் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
குஜராத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

இந்த சட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்காததை தொடர்ந்து தண்டனை காலத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. அதற்கு ஏதுவாக குஜராத் கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திருத்த மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் திலீப் சங்கானி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதனால், எந்த எதிர்ப்பும் இன்றி மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கவர்னர் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். புதிய சட்டப்படி, பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

0 கருத்துகள்: