தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.11

ஹசாரேவின் நிபந்தனைகள் ஏற்பு : இன்று உண்ணாவிரதம் முடிவு!


அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று நிபந்தனைகளையும் உள்ளடக்கிய லோக்பால் மசோதா மக்களவையில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும்) ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இதற்கு ஹசாரே குழுவினரும் வரவேற்பு அளித்ததுடன், ஹசாரே இன்று காலை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார் என தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையில் மக்களவை
கூடிய போது, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்பால் மீதான விவாதத்தை தொடக்கினார். அப்போது லோக்பால் மீதி விவாதம் நடத்தினால் மட்டும் போதாது. ஜான் லோக்பால் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்னா புதிய நிபந்தனை விதித்தார்.
இதற்கு ஆளும் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்க்கட்சிகளும் ஒப்புதல் அளித்ததால், ஹசாரேவின் நிபந்தனைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ராஜ்ய சபா, லோக்சபா இரண்டிலும் இந்நடைமுறை மூலம் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தகவலை விலாஸ்ராவ் தேஷ்முக் அண்னா ஹசாரேவிடம் நேரில் சென்று வழங்கியிருந்தார்.
பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்கு பிறகு சபாநாயகர் மீராகுமார், மக்களவையை திடீரென நாள் முழுவதும் ஒத்திவைத்தார். திட்டமிட்டபடி குரல் வாக்கெடுப்பு நடக்காததால் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதா என  மீண்டும் குழப்பம், சந்தேகம் ஏற்பட்டது.
இறுதியில், குரல் வாக்கெடுப்பு இல்லாமலே ஹசாரேவின் நிபந்தனைகள் உள்ளடக்கம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இத்தீர்மானம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதற்கு அனைத்து எம்.பி.க்களும் மேஜையில் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.  இதனால் மக்களவையில் இரவு 8.00 மணிவரை  லோக்பால் பற்றிய கலந்துரையாடல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஹசாரே குழுவினரிடம் இத்தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஹசாரே மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்  'நாங்கள் இந்த யுத்தத்தில் பாதியே வென்றுள்ளோம். எனினும் இன்று இவ்வெற்றி கிடைத்தமைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறுகிறோம். இது எங்கள் வெற்றி அல்ல. மக்கள் வெற்றி. இவ் வெற்றியை கொண்டாடுங்கள். ஆனால் அமைதியுடன் கொண்டாடுங்கள்.
நேற்று அவர் நான் நாளை காலை 10.00 மணியளவில் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன் என தெரிவித்தார். சூரிய மறைவுக்கு பிறகு ஒரு போதும் தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஹசாரே விரும்ப மாட்டார். இதனாலேயே நாளை காலை அவர் உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறார் என அவருடைய நெருங்கிய ஆதரவாளர் கிரண் பேடி டுவிட்டரில் செய்துள்ளார்.
இதேவேளை இது ஹசாரே குழுவினருக்கு கிடைத்த உண்மையான வெற்றி தானா? என நியூஸ் எக்ஸ் ஊடகம், ஹசாரே குழுவின் சாந்திபூஷனிடம் கேள்வி எழுப்பிய போது பூஷன் இவ்வாறு பதில் அளித்தார்.


0 கருத்துகள்: