தேவ்பந்த்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பாராட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் முஹம்மது வஸ்தன்வி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள்
நரேந்திரமோடியின் வளர்ச்சித் திட்டங்களை அனுபவித்து வருவதாக 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வஸ்தன்வி நரேந்திரமோடி பாராட்டிக் கூறியதாக செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தேவ்பந்திலும் இந்தியாவில் பல்வேறு முஸ்லிம்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் வஸ்தன்வி இவ்வாறு தான் கூறவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்த தேவ்பந்த் நிர்வாகம் குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில் வஸ்தன்வி பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக ஐந்து வாக்குகளும், எதிராக எட்டு வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.பின்னர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த அவர், “தாருல் உலூமிலிருந்து நான் விடைபெறுகிறேன். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எனக்கு எதிராக இல்லை. ஆனால் ஒரு பிரிவினர் எனக்கு எதிராக அவர்களை மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள்” என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக