2003ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் வரை 72 சீன பெரும் கோடீஸ்வரர்கள் அசாதாரண மரணம் அடைந்துள்ளனர் அல்லது இளம் வயதில் இறந்துள்ளனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கின்றது.
இந்த 72 பேரும் தனித்தனியே ஏறத்தாழ 80கோடிக்களுக்கு மேல் சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர். 2003ல் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர்களில் 15 பேர்கள் மற்றவர்களால்
கொல்லப் பட்டுள்ளார்கள்; 17 பேர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்; 7 பேர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்கள்; 14 பேர்கள் தூக்கிலப்பட்டுள்ளார்கள்; 19 பேர்கள் இளம் வயதில் நோயினால் மரணித்துள்ளார்கள். இந்தத் தகவலை நியூ கல்டர் வியூ என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவிக்கின்றது.குறைந்த வயதில் மரணித்தவர்களின் சராசரி வயது 48 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இரத்தக் குழாய் அடைத்தும் புற்று நோயினாலும் இறந்துள்ளார்கள். வான்ங் ஜூனாயோ, ஜூனாயோ குழுமத்தின் சேர்மன் தனது 38ஆம் வயதில் புற்று நோயினால் இறந்துள்ளார்.
சீன மக்களில் பெரும்பான்மையினர் 70வயது கழிந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த வயதில் இறந்து விடுகின்றார்கள் என்று ஜிலின் மாகாணத்தின் தலைநகரான் சாங்சுன் நகரின் சுகாதாரக் கல்வி நிறுவனத்தின் தலைவரான டிங் சுங்செங் தெரிவிக்கின்றார்.
தற்கொலை செய்தவர்களில் பெரும்பான்மையினர் தங்களது வியாபாரத் தோல்வியைத்தாங்க இயலாமல் தற்கொலை செய்துள்ளார்கள்.
பவ்டோவ் நகரின் ஹூவிலோங் டிரேட் நிறுவனத்தின் சேர்மன் ஜின் லிபின் தந்து 44வயதில் தன் காருக்குள் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
15 பெரும் கோடீஸ்வரர்கள் தங்களது நண்பர்களாலோ, பங்குதாரர்களாலோ, அல்லது போட்டி வியாபாரிகளாலோ கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
சட்டத்திற்கு புறம்பாக பொருளீட்டிய 14 கோடீஸ்வரர்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மாஃபியா வேலைகள், ஏமாற்று வேலைகள், மற்றவர்களை கொலை செய்யும் தொழில் போன்ற வேலைகள் செய்துவந்தவர்களாவார்கள்.
ஹூரூன் பணக்காரப் பட்டியல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2009 வரை, சீனாவின் பெரும் நிலப்பரப்பில் மட்டும் 80கோடீகளுக்கு மேல் சொத்துள்ளவர்களின் எண்ணிக்கை 55,000 ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக