வாசிங்டன், ஜூன். 16- அமெரிக்க பார்லிமென்டின் செனட் சபை இணையதளத்தில் இணையத் திருடர்கள் புகுந்து சில விவரங்களைத் திருடியுள்ளனர். எனினும், முக்கியமான தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது சும்மா ஒரு விளையாட்டுக்காக நடத்தப்பட்டது. இது ஒரு போர் ஆகுமா? இதனால் எதுவும் பிரச்னை இருக்கிறதா?" என, கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் செனட் சபை இணையதளம், ஏற்கனவே, இணையத் திருடர்களால் பல முறை தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில், 'லுல்ஸ் செக்யூரிட்டி' என்ற இணையத் திருடர்கள் குழுமம், செனட் சபை இணையதளத்தில் புகுந்து, சில பொதுவான தகவல்களை மட்டும் திருடிச் சென்றுள்ளது.
இது குறித்து அக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது சும்மா ஒரு விளையாட்டுக்காக நடத்தப்பட்டது. இது ஒரு போர் ஆகுமா? இதனால் எதுவும் பிரச்னை இருக்கிறதா?" என, கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளது.
இணையத் திருட்டை போர் நடவடிக்கையாகக் கருதலாம் என்று சமீபத்தில் தான் அமெரிக்கா கூறியிருந்தது. திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இதைத் தான், "லுல்ஸ்" தன் அறிக்கையில், "இது ஒரு போர் ஆகுமா?" என, கேலி செய்துள்ளது. இணையத் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரி மார்ட்டினா ப்ராட்போர்ட், "கடந்த வார இறுதியில் தான் இந்தத் திருட்டு கண்டறியப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் பற்றிய விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை. அரசின் அனைத்து இணையதளங்களின் பாதுகாப்பும் மறுபரிசீலனை செய்யப்படும்" என, கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக