தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.11

தவறானமருத்துவம் கோமா நிலையில் பெண்: 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட்


ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் செலுத்தியதில் பெண் கோமா நிலைக்கு சென்ற விவகாரத்தில் மூன்று டாக்டர்கள் உட்பட எட்டு பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (34). இவர் பிரசவத்துக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இங்கு, ஆபரேசனுக்காக ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக டாக்டர்கள் நைட்ரஜன் வாயுவை செலுத்தி விட்டனர். இதில் அவர் மயக்கமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டு, மதுரை ராஜாஜி
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் டாக்டர்கள் முத்து செண்பகம், எட்வர்ட் ஜான்சன், மகேஸ்வரி, பார்மாசிஸ்டுகள் சிவகலை, விசிட்டோர், சண்முகசுந்தரன், நர்சுகள் அனிதா, விஜயகுமாரி ஆகிய எட்டு பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில், ஆக்சிஜன் சிலிண்டரில் நைட்ரஜன் வாயுவை அடைத்து கொண்டு வந்த காண்டிராக்ட் ஏஜென்சியின் கவனக்குறைவுதான், இந்த தவறுக்கு காரணம் என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி டாக்டர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக வேலைநிறுத்த போராட்ட முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

0 கருத்துகள்: