தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.6.11

25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது

புதுடெல்லி, ஜூன். 26-  வருகின்ற 29ந்தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பு
இல்லாமல் போய் விட்டது. 25 பைசா, 50 பைசா நாணயங்களை 99 சதவீதம் யாருமே பயன்படுத்துவது இல்லை. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந்த நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது.
 
யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாணயங்களை கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணமாற்றத்துக்காக ஏராளமானவர்கள் வங்கிகளை தேடி வரத் தொடங்கி உள்ளனர். இந்தியாவிலேயே கேரளாவில் தான் 25 பைசா, 50 பைசா மாற்றம் அதிகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் பொது மக்கள் வசதிக்காக திருவனந்தபுரத்தில் 2 சிறப்பு கவுண்டர்களை ரிசர்வ் வங்கி திறந்துள்ளது.

0 கருத்துகள்: