எகிப்து தலைநகர் கெய்ரோவில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் இடையில் நேற்று நடந்த திடீர் மோதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்து மக்கள் புரட்சி வெற்றி பெற்று, அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபார் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இடம்பெற்றுள்ள முதல் பாரிய கலவரமாக இது மாற்றம் பெற்றுள்ளது.
கிறிஸ்த்தவ பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு முனைந்த வேளையில், கிறிஸ்த்தவ - இஸ்லாமிய மதத்தலைவர்களிடையே உருவாகிய முறுகல் நிலையை தொடர்ந்து, வடமேற்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இம்பாடாவில், உள்ள Coptci Saint Church தேவாலயம், இஸ்லாமிய குழுவொன்றினரால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று சனிக்கிழமை மாலை இவ்வன்முறை வெடித்தது.
துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, கல்லெறிதல் என இரு தரப்பினாலும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கு பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டனர். எனினும் மோதல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் 6 பேர் உயிரிழந்ததாகவும், 75 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
80 மில்லியன் மக்கள் சனத்தொகை கொண்ட எகிப்து நாட்டில் 10 சதவீதமானோர் கிறிஸ்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக