லோக்பால் கூட்டுக்குழுவில், ஹாசாரேவின் கோரிக்கைக்கு ஏற்ப மக்கள் பிரநிதிகளும் சரிசமமாக இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்த அன்னா ஹாசாரே இன்று பழச்சாறு பருகி தனது உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.
இன்று மத்திய அரசினால் அதிகாரபூவமாக லோக்பால் மசோதா திருத்த கூட்டக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஹாசாரேவின் பிரதிதிநிகளிடம் கையளிக்கப்பட்டதும், ஹாசாரே உண்ணாவிரதமிருந்த ஜந்தர் மந்தர் பகுதியே கோலாகலமாகியது. மக்கள் வெற்றிக்களிப்புல் உற்சாக குரல் எழுப்பினர்.
இம்மகிழ்ச்சியை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட அன்னா ஹாசாரே, 'இது இந்தியாவுக்கு கிடைத்த நிஜமான வெற்றி என்றார்.'
0 கருத்துகள்:
கருத்துரையிடுக