மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்திக்க திமுக முடிவுசெய்துள்ளது.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர்,
சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படக் கூடும் என பரவலாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் திமுக வெளியிட்ட அறிக்கையில், குற்றம் நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விரிசலை உண்டாக்கி அதை உடைக்க எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக அந்த அறிக்கையில் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
2ஜி வழக்கை திமுக சட்டரீதியாக சந்திக்கும். குற்றம் நிரூபிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி இல்லை. தவறான பிரசாரத்தின்மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக