தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.4.11

செயற்கையான முறையில் காஸ்ஸா பகுதியுடன் ஒரு தீவை உருவாக்க இஸ்ரேல் திட்டம்


ஜெருலேசம்:காஸ்ஸா பகுதியுடன் செயற்கையான தீவை உருவாக்க இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் அதிகாரிகள் விவாதித்ததாக இஸ்ரேல் பத்திரிக்கை செய்தி வெளியட்டுள்ளது.
இது தொடர்பாக 9.94 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான திட்டம் முன் வைக்கப் பட்டுள்ளது.
இஸ்ரேலின் போக்குவரத்து துறை அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், “இந்த திட்டம் பல மாதங்களாக
கருத்தில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இதற்க்கான கட்டுமான செலவிற்கான தொகை இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.” என  டெய்லி கார்டியன் என்ற இஸ்ரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
காஸ்ஸா பகுதியில் கடல்வழிப் போக்குவரதிற்கான துறைமுக வசதி இல்லை மேலும் இஸ்ரேலின்  குண்டு வீசினால் காஸ்ஸா விமான நிலையமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவுப் பகுதியை தற்போதைய ஃபலஸ்தீனப் பிரதமரான மஹ்மூத் அப்பாஸை நிர்வகிக்க  டெல் அவிவ் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தீவுக் கட்டுமானத் திட்டம் காஸ்ஸாப் பகுதியை நிர்வகிக்கும் ஃபலஸ்தீனப் போராட்ட இயக்கமான ஹமாஸை தனிமைப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் காஸ்ஸாவின் கடற்கரைப் பகுதியை மஹ்மூத் அப்பாஸின் மூலம் ஆட்சி செய்யப்படும் வெஸ்ட் பேங்க் பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்க முடியும். கடற்கரைப் பகுதி ஹமாஸின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளது.
காஸ்ஸாப் பகுதியில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பின் இஸ்ரேல் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்து தடைகள் மூலம் முற்றிலும் எந்த அடிப்படை வசதியும் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலப் பகுதியாக மாற்றியுள்ளது.
அதேநேரத்தில் சுற்றுச் சூழல் மற்றும் ஃபலஸ்தீன் அதிகாரிகள் இது நடக்க வியலாத ஒரு பைத்தியக்காரத் தனமான திட்டம், இது  அரசியல்வாதிகள் லாபம் அடையும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தினர்.  நன்றி : தூது

0 கருத்துகள்: