பெய்ஜிங், உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்க புகார் தெரிவித்துள்ளது.
சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன்
மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் துனீசியா, எகிப்து, போன்ற நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா தனது சொந்த மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக