
நீதிக் கிடைக்காமல் சமாதானத்தை குறித்து பேச இயலாது என பிருந்தா காரட் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர்
குழு ஏற்பாடுச்செய்த 3தின மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் பிருந்தா காரட்.
குற்றவாளிகளான அதிகாரிகளை தண்டிப்பது சமரசத்திற்கு வாய்ப்பை உருவாக்கும். இது கஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்கும். கடந்த ஆண்டு நடந்த போராட்டம் தொடர்பான ஒரு வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது. குற்றவாளிகளுக் கெதிராக வழக்கு பதிவுச் செய்யாதது, கஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவின் விருப்பத்திற்கு நலன் பயக்காது. இவ்வாறு பிருந்தா காரட் கூறினார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக