
இந்நிலையில், டில்லி சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதி, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் இல்லை' என, அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இடைவெளியை சரி செய்யும் நோக்கில், மணியை தூது அனுப்பினார். மணி, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சு, பா.ம.க.,வுக்கு சாதகமாக அமையவில்லை. பா.ம.க., சார்பில் கேட்கப்பட்ட, 35 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஆகியவற்றுக்கு, அவர்கள் சம்மதிக்கவில்லை. அத்துடன், குறிப்பிட்டு எந்த தொகுதியையும் பா.ம.க., கேட்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பா.ம.க., சம்மதிக்கவில்லை. பா.ம.க., விரும்பும் தொகுதி வேண்டும் எனில், 18 தொகுதி மட்டுமே தர முடியும் என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக