மாவோஜிஸ்ட்டுக்களுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ராய்ப்பூர் கீழ் நீதிமன்றம்.
குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் (70) சட்டீஸ்கர் மாநில பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திவந்தார்.
அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அவர் கைதாகிய தருணம் அவரது மருத்துவ தொண்டுக்காக கௌரவமான சர்வதேச விருதும் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் நாராயண் சன்யால் என்ற மாவோஜிய சித்தாந்தவாதிக்கும் தலைமறைவாக வாழ்ந்துவந்த மாவோஜிஸ்ட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே செய்திப்பரிமாற்றங்கள் நடைபெற உதவியாக இருந்தவர் என அவர் மீது குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்பட்டு கைதாகினார்.
தற்போது இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதை எதிர்த்து மேன்முறையீடு செய்வார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மாவோஜிஸ்ட்டுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைப்பு அட்டூழியங்கள் செய்திருந்ததாக பினாயக் சென் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக