இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து, சிலி தூதரகங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில்
இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ்து விடுமுறையை முன்னிட்டு இவ்விரு தூதரகங்களுக்கும் கிடைக்கப்பெற்ற இரு பொதிகளிலிருந்து இவ் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இது குறித்து சுவிற்சர்லாந்து தூதரக காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில், இப் பார்சல் பேர்னில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இத்தாலியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தனர்.
சுவிஸ் தூதரகம் மீதான தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்தில் சிலி தூதரகத்தில் இதே போல் பார்சல் குண்டு வெடித்துள்ளது. உக்ரேய்ன் தூதரகத்திலிருந்தும், சந்தேகத்துக்குரிய பார்சல் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பு கூறவில்லை.
எனினும், அண்மையில் லண்டனில் மாணவர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளின் பிரதிபலிப்பாக இத்தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் சுவிஸ் தூதரக பணியாளரின் கரங்களில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக