தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.10

எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்

கெய்ரோ,அக்.11:எகிப்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் இயக்கம் என சிறப்பிக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அடுத்த மாதம் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும்.

சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கி 3 இல் ஒரு பகுதி இடங்களை கைப்பற்ற அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவம் தடைச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்த பிறகும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் 20 சதவீத இடங்களை கைப்பற்றி அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 500க்குமேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் 169 இடங்களில் போட்டியிட அவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய எதிர்கட்சி தலைவரும் முன்னால் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவருமான முஹம்மது அல் பராதி தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தார். தேர்தலில் பங்கேற்பது ஹுஸ்னி முபாரக் அரசை அங்கீகரிப்பதற்கு சமம் என பராதி கூறியிருந்தார்.

ஆனால், மக்களுக்கு மாற்று அரசியலைக் குறித்து கல்வியறிவு அளிக்கவேண்டிய வாய்ப்புதான் தேர்தல் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், தேர்தலில் முறைகேடுகளை நடத்த திட்டமிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் அரசின் முயற்சியைக் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் முஹம்மது பதாஇ அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த தேர்தலுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையை அதிகரித்திருந்தது எகிப்திய அரசு.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

0 கருத்துகள்: