தாய்வான் அரசு சமீபத்தில் தனது தீவுக்கு தீபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மேற்கொள்ளவி ருந்த விஜயத்தை திடீரென ரத்து செய்துள்ளது.இந்ந டவடிக்கை மூலம் அங்குள்ள மகளிர் அமைப்பொன் றுடன் அவர் அடுத்த மாதம் மேற்கொள்ளவிருந்த கூ ட்டமும் தடைப்பட்டிருப்பதால் அவ்வமைப்பு தாய் வான் அரசு மீது கடுங்கோபம் கொண்டுள்ளது.தாய் வானின் முன்னால் பிரதி அதிபர் அன்னெட்டே லூ இனால் வழிநடத்தப்படும் அங்குள்ள மகளிருக்கான வணிக மற்றும் தொழில் சார்ந்த
கூட்டமைப்பு, அரசாங்கத்தின் இந்தத் தடை யுத்தரவு குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளது. அதாவது 'இந்தத் திடீர் ரத்தின் மூலம் சீனாவைக் கோபமடையாமற் செய்வது தாய்வானின் நோக்கம் எனவும் மேலும் அந்நாடு சீனா மீது கொண்டிருக்கும் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது எனவும் கூறியுள்ளது. மேலும் இது நாடு கடந்து இந்தியாவில் வாழ்ந்து வரும் தீபேத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை ஒரு பிரிவினை வாதியாகவே (Separatist) தாய்வான் சித்தரிப்பதாக மாற்றியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் லூ இன் பேச்சாளர் இது பற்றிக் கூறுகையில், தாய்வான் அரசு வெளிப்படையாகவே சீனாவுடனான எதிர் விளைவு குறித்து கவலைப் படுவது எம்மை மிகவும் ஆத்திரப் படுத்துகின்றது எனவும் தான் எதைச் செய்யும் முன்னரும் சீனாவின் அனுமதியை அதற்குப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அது கொண்டிருப்பது மிகவும் கேலிக்கிடமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இக்கூட்டமைப்புக் கூறுகையில், அவர்கள் நேரடியாகவே தலாய் லாமாவுடன் தொடர்பினை மேற்கொண்டதாகவும், மேலும் அவர் டிசம்பரில் தாய்பேயில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்திய கூட்டத்தில் பங்கேற்பதற்கு அனுமதியளித்திருந்தார் எனவும் மொழிந்துள்ளது. எனினும் தாய்வானின் வெளிநாட்டமைச்சு இந்த அழைப்புக்குத் தடை விதித்ததுடன் இந்த முடிவுக்கும் சீனாவுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்திருந்தது.
தீபேத்தின் இமாலய மலைத்தொடரில் தமக்கு சொந்தமான நாட்டுக்கு விடுதலை பெறவென தலாய் லாமா முயற்சிப்பதாக சீனா அவர் மீது அதிகபட்ச வெறுப்பை பல வருடங்களாகக் காட்டி வருகின்றது. ஆனால் தலாய் லாமா தனக்கு சுய அதிகாரமும் மத சுதந்திரமும் மட்டுமே வேண்டும் என்றே கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாய்வானின் அதிபராக 2008 ஆம் ஆண்டு மா யிங் - ஜெயோயூ சீன ஆதரவுடன் பதவியேற்றதிலிருந்து தாய்வான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான அரசியல் இராஜதந்திர உறவும் மிகவும் வலுப்பட்டு வருகின்றமையும் இக்கட்டத்தில் எடுத்து நோக்கப் பட வேண்டியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக