தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.12

அரசு மருத்துவ மனைகளில் சித்த மருத்துவம் : தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!


தமிழகத்தில் வேகமாக பரவி வரும்  டெங்கு காய்ச்ச லை கட்டுப்படுத்த அரசு மருத்துவ மனைகளில் சித் த மருத்துவம் செய்ய தமிழக சுகாதாரத்துறை அறிவி த்துள்ளதுதமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிரு ஷ்ணன் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங் குகாய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், டெங்கு
காய்ச்ச லை சரி செய்யவும் சித்தமருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம், மலை வேம்பு இலை சாறு ஆகியவை பயனுடையதாக உள்ளன. எனவே இவற்றையும், நிலவேம்பு கஷாயம், மலைவேம்பு இலைச்சாறு, அதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதி கம் உள்ள பப்பாளிப் பழம் ஆகியவைகளையும் அரச மருத்துவமனைகளு க்கு வழங்க தமிழக சுகாதாரத்துறை  உத்தரவிட்டு உள்ளது என கூறினார்.

    கடந்த இரு மாதங்களில்  இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 50 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால்  உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்: