சிரிய அதிபர் ஆஸாத்தும், அவருடைய தலைமையி ல் இயங்கும் அரச கொலைப் படையினரும் போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா மறுபடியும் தெட்டத்தெ ளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளது.பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், கைதுகள், மறைமுகமான சித் திரவதைகள் போன்றவற்றில் மனித குலத்திற்கே சாபக்கேடாக இவர்களுடைய இருத்தல் காணப்படு வதை ஐ.நா சுட்டிக் காட்டியுள்ளது.சிரிய படைகளின் அதி உச்சகட்ட யுத்த மீறலின் ஓரங்கமாக வடபுல சிரியாவில் இருந்த அஸாஸ்
நகரத்தில் நடாத்திய குண்டுவீச்சுக்கள் இருந்துள் ளன.
நேற்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டு 150 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பத்து வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு அதற்குள் புதைந்த சடலங்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இஸ்ரேல் செய்யவில்லை ஓர் இஸ்லாமிய அரசுதான் செய்கிறது என்பதை நாம் நம்பாமல் நம்புகிறோம் என்று அடி ஓமர் என்ற நபர் ராய்டருக்கு தெரிவித்துள்ளார்.
சிரிய அதிபரின் நாட்கள் எண்ணப்பட்டாலும் அவர் தனக்குக் கிடைக்காத பால் இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக