தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.12

ஈரான் புதிய ஏவுகணை சோதனை: இஸ்ரேலை தாக்கும் திறன்

இஸ்ரேலை தாக்கும் திறன் படைத்த ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்து பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரானின் காவிர் பாலைவனத்திலிருந்து ஷஹாப்-3 என்ற ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. ஈரான் இராணுவம் ஒரு வார இராணுவ ஒத்திகையை நிகழ்த்தி வருகிறது. இந்த ஒத்திகை இன்றுடன் நிறைவடைகிறது.ஷஹாப் - 3 ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரம்
சென்று இலக்கைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 கி.மீ தொலைவில் உள்ள
இஸ்ரேலை எளிதாக தாக்கலாம்.
இதற்கு முன்பு ஷஹாப்-1 மற்றும் ஷஹாப் -2 ஆகிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை இராணுவம் சோதித்துப் பார்த்தது. இவை முறையே 300 கி.மீ. மற்றும் 500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் படைத்தவை.
சுமார் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல்வேறு இடத்திலிருந்து ஏவப்பட்டு கார்வி பாலைவனத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஷஹாப்-3 ஏவுகணை, சோதனையின் போது 1,300 கி.மீ. தொலைவில் இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இராணுவ ஒத்திகையின் நிறைவு நாளான இன்று ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசும் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்னா என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹஜிஸதே தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: