தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.6.11

போலீஸார் தடியடி நடத்தியபோது பெண் உடை அணிந்ததில் தவறில்லை: ராம்தேவ்


டில்லியில் தடியடி நடைபெற்றபோது தான் பெண்கள் அணியும் சல்வார் சூட் உடையை அணிந்ததில் எவ்விதத் தவறும் இல்ல என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
டில்லியில் சனிக்கிழமை ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து போலீஸôர் தடியடி நடத்தியபோது அவர், வெள்ளை நிற சல்வார் உடையணிந்து அங்கிருந்த கூட்டத்தில் மறைந்து கொண்டார்.
போலீசார் சுமார் 2 மணி நேரம் தேடிய பின்னர்தான் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்நிலையில் ஹரித்வாரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம், தான் பெண் உடை அணிந்தது குறித்து ராம்தேவ் பேசினார். அப்போது, "பெண்கள் அணியும் உடையை நான் அணிந்ததில் தவறு ஏதுமில்லை. இதனைக் கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கும் இல்லை.

ஆண்களைப் பெற்றெடுப்பதே பெண்தானே. அப்படியிருக்கும் போது தாய்மார்களின் உடை அணிந்தேன் என்று கூற நான் ஏன் வெட்கப்பட வேண்டும். பெண்கள் உடையை அணிவதால் யாரும் பலவீனமடைந்துவிடுவது இல்லை' என்று ராம்தேவ் கூறினார். மக்களுக்கு எதிராக போலீஸôர் மிகக்கொடுமையாக நடந்து கொண்டார்கள்.
அவர்களைக் கலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், காயமடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவர்களின் தாக்குதலில் இருந்தது. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். ஆனால், அவர் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார். டில்லியில் போலீஸôர் வன்முறையில் ஈடுபட்டது கூறித்து உச்ச நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதை வரவேற்கிறேன்.
அப்பாவி மக்கள் மீதும், பெண்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மனித உரிமைகள் ஆணையமும், தேசிய பெண்கள் ஆணையமும் விசாரிக்க வேண்டும் என்றும் ராம்தேவ் கூறினார்.

0 கருத்துகள்: