லண்டன், டிச.16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இணையதள நிறுவனர் அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பிரிட்டிஷ் போலீஸôர் கைது செய்தனர்.இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது. உத்தரவாதத் தொகையாக அவர் 2.4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சிறையிலிருந்து விரைவில் ஜாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக