சென்னை யில் 734 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 14,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 14,000 இடங்களில் சுமார் 16,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அடுத்த 10 நாட்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதற்றமான இடங்களில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
தமிழகத்துக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
விநாயகர் சிலைகள் ஊர்வல நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடப்பதற்கு அனைத்து பாகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இம்மானுவேல்சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்து விட்டது. அந்த நிகழ்ச்சியையொட்டி தென் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
சென்னை நகரில் அதிகபட்சமாக தியாகரா யநகர் பகுதியில் தான் 160 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
**************************************************************
மராட்டியம் போன்ற ஓரிரு வடமாநிலங்களில் மட்டும் கொண்டாடப்பட்டுவந்த வினாயக விழா சில பத்தாண்டுகளாய் தமிழகத்தில் காலூன்றி விரிவிக்கப்பட்டு வருவதன் சான்றுதான் இச்செய்தி. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை அச்சத்தில் தள்ளி, அவர்களை எதிரிகளாய் சித்தரித்து அதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் தீண்டத்தகாதவனாய், அடிமையாய் வைத்திருந்த மக்களை இந்து எனும் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்கான பார்பனீயச் சதியின் வடிவம்தான் இந்த விநாயகன் விழா. இது கொண்டாட்டமல்ல, சாதியக் கொடுமைகளை வெட்டியெறிய நினைக்கும் யாரும் புறக்கணிக்க வேண்டிய ஒன்று.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக