புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
