புதுடெல்லி:கேபினட் அமைச்சர்களை நியமித்து தற்போதைய அமைச்சர்களின் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையை புனரமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்பட நான்குபேர் தனி பொறுப்புடைய இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்கள் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த இ.அஹ்மதிற்கு தனிப்பொறுப்பு வழங்கப்படவில்லை. மாறாக, மனித வள மேம்பாட்டுத்துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.