அல்ஜீயர்ஸ்:லிபிய அதிபர் முஅம்மர் கதாபியின் மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) அல்ஜீரியா வந்தடைந்துள்ளதாக அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“கதாபியின் மனைவி ஸஃபியா, அவரின் மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னிபால், முஹம்மத், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் காலை 8.45 மணிக்கு
(0745 GMT) நுழைந்தார்கள். அல்ஜீரியா-லிபியா எல்லை வழியாக அவர்கள் வந்தார்கள்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. ஏபிஎஸ் செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால் கதாபியின் இருப்பிடம் குறித்து அந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக